ரெண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்துக் கிடக்கிறார்கள் – உதயநிதி

Default Image

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள் உதயநிதி பேச்சு. 

நேற்று சென்னை புரசைவாக்கம் பகுதியில் அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  9 ஜோடிகளுக்கு சீர்வரிசை உடன் திருமணத்தை நடத்தி வைத்தார்.

அப்போது பேசிய அவர், மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணத்தை நான் கூறுகிறேன். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் போல சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். ஓபிஎஸ் தவறுதலாக என்னுடைய காரில் ஏற சென்றார். காரில் ஏறினாலும் பரவாயில்லை. ஆனால் கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று சட்டமன்றத்தில் கூறினேன். அதற்கு எந்தக் காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என கூறினார்.

ஆனால் நேற்று இரண்டு மணி நேரம் கமலாலயத்தில் தான் அவரது கார் காத்திருந்தது. இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்து கிடக்கிறார்கள். இதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்