திருட்டு பைக்கில் லூட்டி அடித்த காதலர்கள்..! காத்திருந்த அதிர்ச்சி..!
சத்தீஸ்கரில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ் செய்து கொண்டு பயணம் செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சத்தீஸ்கரில் உள்ள துர்க் பகுதியில், காதலர்கள் பைக்கில் கட்டிப்பிடித்தவாறு ரொமான்ஸ் செய்துகொண்டே ஒன்றாக சென்றுள்ளனர். அவர்கள் சாலையில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
சாலையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதற்காகவும் பொது வெளியில் அநாகரிக செயலில் ஈடுபட்டதற்கும் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பயணம் செய்த பைக் திருடப்பட்ட வாகனம் என்பதும் பைக் தொடர்பான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை என்பதும் தெரியவந்தது.
भिलाई : चलती बाइक पर कपल का रोमांस pic.twitter.com/G6WNu5lJ0K
— Anoop mishra rahul (@rahulmi50606036) January 21, 2023