லாபத்தை பற்றி நினைக்காமல் மக்கள் நன்மை பற்றி யோசித்து முடிவு எடுக்கப்படும்.! கமல்ஹாசன் விளக்கம்.!
எங்கள் லாபத்தை பற்றி நினைக்காமல் மக்கள் நன்மை பற்றி யோசித்து முடிவு செய்யப்படும். – இடைதேர்தல் குறித்து கமல்ஹாசன் விளக்கம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினர்.
அந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறுகையில், எங்கள் கட்சயின் நிலைப்பாட்டை நான் எடுக்க முடியாது. அந்த நிலைப்பாடு குறித்து அடுத்து நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளோடு ஆலோசித்து கண்டிப்பாக சொல்வோம். எங்கள் லாபத்தை பற்றி நினைக்காமல் மக்கள் நன்மை பற்றி யோசித்து முடிவு செய்யப்படும். என தெரிவித்தார்.