பிபிசி ஆவணப்படம் பிளாக்! ஆனால் கோட்சே பற்றிய படம் அல்ல, மோடிக்கு ஓவைசி கேள்வி?
பிபிசி ஆவணப்படம் பிளாக் செய்யப்பட்டது, ஆனால் கோட்சே பற்றிய படம் தடை செய்யப்படுமா என மோடிக்கு, ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் கலவரங்கள் குறித்த பிபிசியின் ஆவணப்படத்திற்கு எதிரான மத்திய அரசின் தடை நடவடிக்கையை AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சித்தார். ஹைதராபாத் எம்பியான ஓவைசி இது குறித்து பேசும்போது, மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே மீது எடுக்கப்பட்ட திரைப்படத்தை தடை செய்யுமா என பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியைப் பற்றி பிபிசி ஏதாவது காட்டினால், அது சிக்கலாக இருக்கிறது, அதனை தடை செய்து விடுகிறது. குடியரசு தினத்தன்று வெளிவரவிருக்கும் “காந்தி கோட்சே: ஏக் யுத்” திரைப்படத்தைத் தடை செய்யக் கோரி ஓவைசி கூறினார். மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவைக் குறித்து இந்த திரைப்படம் உருவாகிறது.
காந்தி ஏன் அவரால் கொல்லப்பட்டார் என்பதைப் பற்றி படம் பேசுகிறது. இந்த படத்தை தடை செய்யுமா? இது பிரச்சனைக்குரியது, காந்தியை விட நரேந்திர மோடி பெரியவர் அல்ல. ஏன் இந்த பாரபட்சம்? என்று ஒவைசி மேலும் கூறினார்.