எளிதாக சுதந்திரம் கிடைக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி
சுதந்திரத்திற்காக போராடிய ஒரு வீரரையும் மறந்துவிட முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நேதாஜியின் 126 ஆவது பிறந்தநாள் தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், சுதந்திரத்திற்காக போராடிய ஒரு வீரரையும் மறந்துவிட முடியாது. சுதந்திரம் எளிதாக கிடைக்கவில்லை. நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் இருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு எடுத்துள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.