இடைதேர்தல் களம் : கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எதிரிகள் இல்லை.! – திருமாவளவன் நம்பிக்கை.!

Default Image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கண்ணனு எட்டிய தூரம் வரையில் எதிரிகளே இல்லை. – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு சேகரித்தார்.

அதே போல் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து ஆதரவு கோரினார். அதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்ததனர். இதில் இளங்கோவன் பேசுகையில்,   திமுக கூட்டணியில் போட்டியிடும் எனக்கு ஆதரவு தர வேண்டும் கோரினேன். அவரும் ஆதரவு தருவதாக சொன்னார். மேலும், பிரச்சாரத்திற்கு வருவதாக சொல்லியுள்ளார் .

அதிமுகவின் 4 அணிகள் மற்றும் பாஜக போட்டியிட்டாலும் கவலையில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி திமுக நல்ல்லாட்சிக்கு கிடைக்கும் பரிசு. என் மகன் விட்டு சென்ற பணிகளை நான் செய்வேன். ஈரோடு மக்கள் அவன் மீது பாசமாக இருக்கிறார்கள். எப்படியாவது தமிழகத்தில் ஊடுருவ பாஜகவினர் முயல்கிறார்கள்.  இந்த முறை எடுபடாது. என இளங்கோவன் பேசியுள்ளார் .

அடுத்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி உறுதி செயப்பட்டது. ஈரோடு பெரியார் மண் . பெரியார் வாரிசாக இளங்கோவன் களமிறங்குகிறார். உறுதிப்படுத்தும் விதமாக இந்த வெற்றி அமையும். அதிமுகவை பொறுத்தவரையில் பாஜக தோளில் ஏறி நிற்கிறார்கள். கண்ணனு எட்டிய தூரம் வரையில் எதிரிகளே இல்லை .நானும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன். எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்