சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல வருடங்களாக நடத்தும் நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இதனால் இவர் மேல் பல சர்ச்சைகளும் அவ்வப்போது கிளம்பும்.
இந்த நிகழ்ச்சி பொறுத்தவரை இவர் பலரின் குடும்ப பிரச்னையை சரி செய்வதற்காக இருதரப்பு வீட்டாரிடமும் பேசுவார். அதில் சில நேரங்களில் மிகவும் மோசமாக பேசுவார். இவரை போல் மற்ற ஒரு பிரபல தொலைக்காட்சியிலும் நடிகை குஷ்பூவை வைத்து இது போல் ஒரு நிகழ்ச்சி எடுத்தனர்.
இந்நிலையில் தற்போது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரைகிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.