கோவா மதுபான விடுதியில் குண்டுவெடிப்பு! வெளியான சிசிடிவி வீடியோ.!
கோவா மதுபான விடுதியில் குண்டுவெடித்துள்ள சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவாவின் மபுசாவில் உள்ள டாங்குய் காலனியில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள பார் மற்றும் உணவகத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த சம்பவம் அதிகாலை நடந்துள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, எனினும், 40 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவா காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை இருந்தும் முதற்கட்ட விசாரணையில் மதுபான விடுதியிலுள்ள சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், பாரில் இருந்த சிலிண்டர்கள் சேதமடையவில்லை தீயணைப்பு துறையினர் மேலும் தெரிவித்தனர்.
Cylinder blast at Mapusa caught on #CCTV camera.#Goa pic.twitter.com/wFth3coP5l
— Siraj Noorani (@sirajnoorani) January 22, 2023