பசுவை கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை..! ₹5 லட்சம் அபராதம்..! – நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Default Image

பசு வதை எப்போது ஒழிகின்றதோ, அப்போது உலகின் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என நீதிபதி கருத்து. 

கடந்த 2020-ம் ஆண்டு, மகாராஷ்டிராவில் இருந்து 16 பசு மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்ததாக கூறி முகமது அமீன் என்பவரை குஜராத் போலீசார்  கைது செய்தனர். இந்த வழக்கில் டாப்பி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வினோத் சந்திரா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அந்த தீர்ப்பின் படி, பசு, வெறும் விலங்கு மட்டுமல்ல, ஒரு தாயை போன்றது. பசுவைப் போல நன்றியுள்ளவர்கள் யாரும் இல்லை. பசு வதை எப்போது ஒழிகின்றதோ, அப்போது உலகின் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.

உலகம் வெப்பமயமாதலுக்கு பசு வதையே காரணம். அதை ஒழித்தால்தான் பருவநிலை மாற்றத்தை தடுக்க முடியும். தீர்க்கவே முடியாத பல்வேறு நோய்களுக்கு, கோமியம் சர்வரோக நிவாரணியாக விளங்குகிறது. பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு அடையாது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்