அந்த வார்த்தைகள் என்னை மனரீதியாக புண்படுத்துகிறது…நடிகை ராஷ்மிகா வேதனை.!
நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு எதிராக வெறுப்பு கருத்துகளை பரப்புகின்றனர்” என வருத்தத்துடன் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் ” எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை எதற்காக எனக்கு எதிராக வெறுப்பு கருத்துகளை பரப்புகின்றனர் என்று. உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியீட்டால் பையன் மாதிரி தோற்றமளிப்பதாக கூறுகிறார்கள்.
அப்படி இல்லையென்றால், குண்டாக இருக்கிறேன் என்கிறார்கள், பேசாமல் இருந்தால் திமிறு என சொல்கிறார்கள். சினிமாவை விட்டு விலக வேண்டும் என நினைக்கிறார்களா? என்னிடம் உங்களுக்கு என்ன பிரச்னை? உங்கள் வார்த்தைகள் என்னை மன ரீதியாக
புண்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைபடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.