திமுக – காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்கும் வேட்பாளர் வேண்டும்.! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.!

Default Image

இடைத்தேர்தல் குறித்து எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.  அவர் கூறுகையில், இன்று உள்ள நிலைமையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலில் நின்றால் கூட மாவட்ட நிர்வாகிகள் அவர் பின்னால் துணை நிற்பார்களா என்பது சந்தேகமே, அவருக்கு மற்ற கட்சியை பற்றி பேச தகுதி இல்லை என விமர்சித்தார் .

மேலும், இடைத்தேர்தல் குறித்து எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது. நிற்கும் வேட்பாளர், திமுக – காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்கும் பலம் பொருத்திய வேட்பாளராக இருக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் நல்ல முடிவு வெளிவரும் என அண்ணாமலை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்