ஒரு மாதத்தில் 1 பில்லியன் டாலர் போன்கள்..! ஏற்றுமதியில் அசத்தும் ஆப்பிள்..!
இந்தியாவில் இருந்து ஒரு மாதத்தில் 1 பில்லியன் டாலர் போன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தியாவில் இருந்து மொபைல் போன்களை ஏற்றுமதி செய்வதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் முன்னணி நிறுவனங்களாக திகழ்ந்து வருகிறது. தற்பொழுது ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கை விட ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அரசாங்கத்தின் மேக்-இன்-இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்தியாவில் இருந்து ஒரே மாதத்தில் 1 பில்லியன் டாலர் (7500 கோடி) மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
டிசம்பர் 2022 இல் ரூ.8,100 கோடி மதிப்பிலான ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஏப்ரல் 2020 இல் இந்திய அரசாங்கம் ஸ்மார்ட் போன் உற்பத்தியை அதிகரிக்க பிஎல்ஐ (smartphone Production-Linked Incentive) திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில், ஃபாக்ஸ்கான் ஹான் ஹாய், பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐபோன்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது.
வெளியான தகவலின் படி 2022-23 நிதியாண்டில் 9 பில்லியன் அமெரிக்க டாலர் (ஏறத்தாழ 72,000 கோடி) மதிப்பிலான மொபைல் போன்களை இந்தியா ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.