ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.! பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை.!
தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இடைத்தேர்தல் குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறர்கள்.
தேமுதிக கட்சியும் தங்களது தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே அறிவித்தது போல பிரேமலதா விஜகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலை புறக்கணிக்கலாமா? அல்லது தங்கள் ஆதரவு யாருக்கு? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.