சோமேட்டோ ரகசியத்தை வெளிப்படுத்திய ஊழியர்.! உண்மையை போட்டுடைத்த வாடிக்கையாளர்.!
சோமேட்டோவின் உணவு டெலிவரியில் நடக்கும் மோசடி குறித்து வாடிக்கையாளர், தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
பிரபல உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோ, குறித்த நேரத்திற்குள் உணவுகளை விநியோகம் செய்யும் ஆன்லைன் உணவு டெலிவரி செயலியைக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த சோமேட்டோவில் வாடிக்கையாளர் ஒருவர், தனது அனுபவத்தையும் இங்கு நடக்கும் மோசடி குறித்தும் பகிர்ந்துள்ளார்.
அவர் உணவு ஆர்டர் செய்து அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு, சோமேட்டோ ஊழியரிடம் உணவைப் பெற்றுக்கொண்டார், அப்போது சோமேட்டோ ஊழியர், நீங்கள் அடுத்தமுறை ஆன்லைனில் பணம் செலுத்தவேண்டாம், நீங்கள் நேரில் (COD முறையில்) பணம் செலுத்தினால் நீங்கள் 800 ரூபாய் மதிப்புக்கு உணவு ஆர்டர் செய்யும் போது 200 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
வாடிக்கையாளர், இது குறித்து கூறும்போது தானும் ஒரு தொழிலதிபர் என்ற அடிப்படையில், சோமேட்டோ நிறுவனத்திற்கு நடக்கும் மோசடியை தனது லிங்க்கிட் இன் (LinkedIn) இல் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சோமேட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், தற்போது இது தெரிய வந்துள்ளதாகவும், இதனை சரிசெய்யும் வேலையில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.