பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்ற அசீம்.! விமர்சனங்களை வீசும் நெட்டிசன்கள்.!

Default Image

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர் அசீம் வெற்றிபெற்றது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 6-வது சீசன் இறுதிப்போட்டி நேற்று 6 மணிக்கு நடந்தது. போட்டியில் தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் விளையாடி வந்த நிலையில், விக்ரமன் தான் வெற்றியாளர் என தகவல் வெளியானது.


இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் விக்ரமனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் பலரும் எதிர்பார்க்காத விதத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் தான் என அறிவிக்கப்பட்டது. இது அசீம்  ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்த பலரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


எனவே நெட்டிசன்கள் பலரும்  கோபத்துடன் ட்வீட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என பலவற்றிலும் ” அசீம்க்கு இந்த டைட்டில் தகுதி இல்லை என்றும். தகுதி இல்லாதவங்க கையில வெற்றிக் கோப்பை” என விமர்சனங்களை வீசி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by MOHAMED AZEEM (@actor_azeem)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்