வாட்ஸ் அப்-ன் புதிய அம்சம்..! கொண்டாடும் IOS பயனர்கள்..!
வாட்ஸ் அப், ஐஓஎஸ் (IOS) பயனர்களுக்காக தேதி மூலம் செய்திகளைத் தேடும் அம்சத்தை வெளியிட்டுள்ளது
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி ஐஓஎஸ் பயனர்களுக்கான தற்போதைய அப்டேட்டில் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் அவர்களுக்கு தேவையான செய்தியை தேதி வாரியாக தேட முடியும். இதுவரை பயனர்களுக்கு முக்கிய வார்த்தைகள் மூலம் செய்திகளைத் தேடும் அமைப்பு மட்டுமே இருந்தது.
இந்த அம்சம் மட்டுமல்லாமல் மற்றொரு அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயனர்கள் படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற ஆவணங்களை மற்ற ஆப்களில் இருந்து வாட்ஸ் அப்க்கு ட்ராக் (Drag) செய்து நண்பர்களுக்கு அனுப்ப முடியும்.