நான் ChatGPTக்கு அடிமையாகிவிட்டேன்- கௌதம் அதானி
நான் சாட்GPT ஐப் பயன்படுத்தத் தொடங்கி அதற்கு அடிமையாகிவிட்டேன் என கோடீஸ்வரர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுதும் தற்போது பரவலாகப் பேசப்பட்டுவரும் சாட்GPT, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு புதிய முயற்சியாக கருதப்பட்டு வருகிறது. மக்கள் பலரும் இதனைப் பயன்படுத்தி சாட்GPT(பாட்) உடன் உரையாடல் நடத்தி ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான இந்தியாவின், கௌதம் அதானி சாட்GPTயை தான் பயன்படுத்தத்தொடங்கி அதற்கு அடிமையாகிவிட்டதாக கூறியுள்ளார். 60 வயதான பில்லியனர் அதானி இது குறித்து கூறியதாவது, நான் சிலவற்றிற்கு அடிமையாக இருப்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.
இந்த AI (சாட்GPT) கேள்விகளுக்கு பதிலளிக்கிறது, நகைச்சுவைகளை உருவாக்குகிறது மற்றும் எந்த மனிதனையும் போலவே கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதுகிறது. ஜனநாயகத்திற்கு தேவையான ஒரு கண்டுபிடிப்பு, மற்றும் இது ஆபத்துகளையும் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.