அடுத்தடுத்து சதம்! பிபிஎல்-இல் அசத்தும் ஸ்டீவ் ஸ்மித்.!
ஸ்டீவ் ஸ்மித், பிபிஎல் சீசனில் 2-வது முறையாக சதம் அடித்து, தனது அதிகபட்ச டி20 ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஸ்டீவ் ஸ்மித், நடப்பு பிக்பேஷ் தொடரில் இரண்டாவது சதமடித்து, டி-20யில் தனது அதிகபட்ச ஸ்கோரை அடித்துள்ளார். சிட்னி தண்டருக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியின் ஸ்டீவ் ஸ்மித், அதிரடியாக விளையாடி 66 பந்துகளில் 125* ரன்கள் குவித்தார்.
இது அவருக்கு டி-20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோராகும். அவர் இந்த பிபிஎல் சீசனில், கடந்த 3 நாட்களுக்கு முன் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஸ்டீவ் ஸ்மித் தனது முதல் பிபிஎல் சதத்தை 101(56 பந்துகள்) அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.