பாஜக போட்டியிட்டால் ஆதரிக்க தயார்.! ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.!
பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்க தயார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. – ஓ.பன்னீர்செல்வம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் பணிகளை திமுக , அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் , மற்ற கட்சிகள் என தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் – அதிமுக நேரடி மோதலில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதிமுக தரப்பில் இருந்து இபிஎஸ் பிரிவினர் மற்றும் ஓபிஎஸ் என இரு பிரிவுகளாக தனி தனியாக தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்களுக்கு ஆதரவு கேட்டு பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தும் வருகின்றனர்.
ஏற்கனவே, கமலாயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட மாநில கட்சி நிர்வாகிகளை இபிஎஸ் தரப்பில் இருந்து ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மரியாதை நிமித்தமாக பாஜக தலைவர்களை சந்தித்தேன், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்க தயார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.