வாடகைத்தாய் முறையை தேர்ந்தெடுத்தது ஏன்? மனம் திறந்த பிரியங்கா சோப்ரா.!
நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து எதற்காக வாடகைத்தாய் முறையை தேர்ந்தெடுத்தது என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியங்கா சோப்ரா பேசியுள்ளார். இது குறித்து பேசிய ” வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுத்தபோது, என் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன; முடிந்தவரை அவை என்னை பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டேன்.
ஆனால், என் மகள் பற்றி பேசுவது மிகவும் வேதனையாக உள்ளது. எனக்கு மருத்துவ ரீதியாக சில சிக்கல்கள் இருந்தன. அதனால் வாடகைதாய் முறை அவசியமானதாக இருந்தது. அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கு என்னை பற்றியும், எனது கஷ்டங்கள் பற்றியும் தெரியாது.
நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற உரிமையை யாரும் உங்களுக்கு கொடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார். மேலும் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது லவ் அகைன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.