பாஜகவின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை தெரிவிப்பார் – ஜெயக்குமார்
ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கக்கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என ஜெயக்குமார் பேட்டி.
பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகமான கலாமலாயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக இபிஎஸ் தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கக்கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சியில் தலைவர் அண்ணாமலை தெரிவிப்பார் என தெரிவித்துள்ளார்.