ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.!
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான டேனியல் கிறிஸ்டியன், நடப்பு பிக் பேஷ்(பிபிஎல்) தொடருக்கு பிறகு அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு தனது முதல் டி20 போட்டியில் களமிறங்கிய கிறிஸ்டியன், 405 போட்டிகளில் விளையாடி 5,809 ரன்கள் குவித்துள்ளார், மற்றும் 280 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
39 வயதான அவர் ஓய்வுபெறுவதற்கு முன் பிக் பேஷ் தொடரில் பட்டத்துடன் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிபிஎல்லில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி சிக்சர் அணிகளுக்காக இதுவரை விளையாடியுள்ளார். அவர் 2020 முதல் சிட்னி சிக்சர் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 23 டி-20 மற்றும் 20 ஒருநாள் போட்டிகளில் கிறிஸ்டியன் விளையாடியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.