ஓபிஎஸ்-ஐ இயக்குவதே திமுக தான்.! அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சனம்.!
ஓபிஎஸ்-ஐ பின்னாடி இருந்து இயக்குவது திமுக தான். – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூரில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி பேசினார். அவர் விழாவில் பேசுகையில் ஓபிஎஸ் பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், ஓபிஎஸ் சட்டசபையில் பேசுகையில், ‘எங்கள் அப்பா கலைஞரின் தீவிர பக்தர் என குறிப்பிடுகிறார் . அதுவே அம்மா இருக்கும் போது குறிப்பிட்டு இருப்பாரா என கேட்டார். மேலேயும், ஓபிஎஸ் மகன் தற்போது எம்பியாக இருப்பவர் மு.க.ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்கிறார் என கூறுகிறார். என விமர்சித்தார்.
மேலும், ஓபிஎஸ்-ஐ பின்னாடி இருந்து இயக்குவது திமுக தான் எனவும் தனது விமர்சனத்தை முன் வைத்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.