தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார்.துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக மக்கள் பிரச்னைக்காக களம் இறங்குகிறார் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியும் வழங்குகினார் நடிகர் ரஜினிகாந்த்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 48 பேரை சந்தித்து நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்.
இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து ரசிகர்கள், நோயாளிகளின் பார்வையாளர்களை போலீசார் வெளியேற்றினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.