INDvsNZ ODI: நியூசிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.!
இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி, 33 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்துள்ளது.
நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று ராய்ப்பூரில் 2-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. மேலும் இந்த மைதானத்தில் முதன்முறையாக சர்வதேச அளவில் போட்டி நடைபெறுகிறது.
டாஸ் வென்று இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் முதல் ஒவரிலேயே பின் ஆலன், ஷமியின் பந்தில் போல்டானார். அதன்பிறகு களமிறங்கியவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
15 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்களை இழந்து 33 ரன்கள் குவித்துள்ளது. ஷமி 2 விக்கெட்களும், சிராஜ், தாக்குர், ஹர்டிக் பாண்டியா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.