அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை.! மீண்டும் பாமக விளக்கம்.!
நாங்கள் அதிமுக கூட்டணியில் இல்லை. – பாமக செய்த தொடர்பாளர் பாலு பேட்டி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை, நாங்கள் போட்டியிடவும் இல்லை எனவும், இடைத்தேர்தல் மக்கள் பணத்தை வீணாக்குகிறது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து விட்டார்.
இதுகுறித்து, பாமக செய்தி தொடர்பாளர் பாலு இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், இடைத்தேர்தல் குறித்து நாங்கள் எங்கள் கட்சி தலைவர்களோடு கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட்டது. இடைத்தேர்தலில் எங்கள் நிலைப்பாடு எப்போதும் ஒன்று தான்.
இடைத்தேர்தலில் என்பது மக்கள் பணத்தை வீணடிக்கும் என குறிப்பிட்டு, நாங்கள் போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் தெளிவுபடுத்தினார். மேலும் நாங்கள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போதே அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம்.
தற்போது நாங்கள் அதிமுக கூட்டணியில் இல்லை. எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை எனவும் தெளிவுபடுத்தினார் பாமக செய்தி தொடர்பாளர் பாலு.