ஆசிரியர் பணி வழங்கலில் ஊழல்.? திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் குந்தல் கோஷ் கைது.!
திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் குந்தல் கோஷ் நேற்று இரவு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்ளை நிரப்புகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, அதில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் குந்தல் கோஷிற்கு தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
குந்தல் கோஷ் குடியிருப்பில் நேற்று இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். இதில், பல ஆவணங்கள் மற்றும் ஒரு டைரி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தான் குந்தல் கோஷை விசாரணைகாக அமலாக்கத்துறையினர் கைது செய்து உள்ளனர்.