டீசருடன் வெளியாகும் ‘தளபதி 67’ அறிவிப்பு.! எப்போது தெரியுமா..?
வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில், விரைவில் தளபதி 67 படத்தின் அப்டேட் வரும் என லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஆம், நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக “தளபதி 67 ” என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசருடன் வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தளபதி 67 படத்திற்கான அறிவிப்பை குட்டி டீசருடன் படக்குழு அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தளபதி 67 அப்டேட் 10 நாட்களில் வரும் என லோகேஷ் கனகராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.