ஈரோடு கிழக்கு தொகுதி இடத்தேர்தலில் போட்டியிடவில்லை – ஈவிகேஎஸ் இளங்கோவன்
கட்சி தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் ஏற்பேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி இடத்தேர்தலில் நான்போட்டியிடவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடத்தேர்தலில் எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு கேட்டுள்ளேன்.
கட்சி தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் ஏற்பேன். அதிமுக சேர்ந்து வந்தாலும் சரி பிரிந்து வந்தாலும் சரி நாங்கள் வெற்றி அடைவோம் என தெரிவித்துள்ளார்.