அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் தரப்பினர் தீவிர ஆலோசனை.!
அதிமுக தலைமை செயலகத்தில் இபிஎஸ் தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக சார்பில் ஏற்கனவே கூட்டணி மூலம் வென்ற காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிட உள்ளது.
அதிமுக சார்பில் அதிமுகவே நேரடியாக போட்டியிடும் என இபிஎஸ் தரப்பு அறிவித்து விட்டது. அதே போல தங்கள் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டும் வருகின்றனர்.
அதே போல் ஓபிஎஸ் தரப்பிலும் இடைத்தேர்தல் பணிகளை துவங்கி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருவதால் அதிமுக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளளது.
இந்த சமயம் இன்று இபிஎஸ் தரப்பு சென்னையில் உள்ள அதிமுக தலைமை செயலகத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.