ஜம்மு காஷ்மீர் : பள்ளத்தாக்கில் விழுந்து மினி பஸ் விபத்து..! 5 பேர் உயிரிழப்பு.! 15 பேர் படுகாயம்.!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்து மோண்ட்லி என்ற கிராமத்தில் இருந்து தனு பரோல் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது சாலையின் வளைவு பாதையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 60 வயது பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.