பக்தர்களின் மனதை அறநிலையத்துறை புண்படுத்தவில்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்
அதிமுக ஒன்றுபட்டு நின்றாலும் ஈரோடு கிழக்குத் தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் கூறுகையில், அதிமுக ஒன்றுபட்டு நின்றாலும் ஈரோடு கிழக்குத் தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். பக்தர்களின் மனதை அறநிலையத்துறை புண்படுத்தவில்லை. பாஜகவின் கனவை தான் தகர்த்துள்ளது என தெரிவித்துள்ளார்.