உங்க மனசு ரொம்ப பெருசு…130 பேருக்கு தங்கக்காசு பரிசளித்த கீர்த்தி சுரேஷ்.!
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் நானிக்கு ஜோடியாக “தசரா” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பும் சமீபத்தில் தான் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடையும் போது கீர்த்தி சுரேஷ் செய்த நல்ல செயல் ஒன்று அனைவரையும் வியக்கவைத்து பாராட்ட வைத்துள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் என்றால் படப்பிடிப்பு நிறைவு நாளின் போது படத்தில் பணியற்றிய சக நடிகர்கள், டெக்னீஷியன்கள் பலருக்கு தலா 2 கிராம் தங்கக்காசு பரிசாக வழங்கி உள்ளார்.
மொத்தமாக 130 பேருக்கு தங்கக்காசு பரிசாக கீர்த்தி சுரேஷ் வழங்கியுள்ளார். இந்த தகவலை பார்த்த அவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் உங்கள் மனசு ரொம்ப பெருசு என அவரை பாராட்டி வருகிறார்கள்.
மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது “தசரா” திரைப்படத்தினை தொடர்ந்து, அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.