வேங்கைவயல் குடிநீர்தேக்க தொட்டி சம்பவம்.! வீடு வீடாக சென்று எஸ்பி தீவிர விசாரணை.!
வேங்கை வயல் கிராமத்தில் சிபிசிஐடி எஸ்பி நேரடியாக சென்று வீடு வீடாக விசாரணை செய்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையை தற்போது சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி சிபிசிஐடி டி.எஸ்.பி பால்பாண்டி தலைமையில் 35 சிபிசிஐடி போலீசார் கொண்ட 10 சிபிசிஐடி தனிப்படைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நேற்று புதுக்கோட்டையில் சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தனிப்படை அதிகாரிகளோடு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து இன்று எஸ்பி தலைமையிலான குழு வேங்கைவயல் கிராமத்திற்கு நேரடியாக சென்று வீடு வீடாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலம் கலந்த சம்பவத்தை நேரில் பார்த்தது யார்? முதலில் இதனை கண்டறிந்தது யார்? முதலில் எந்த குழாய்க்கு அந்த தண்ணீர் வந்தது? அதனை சரி செய்து விட்டார்களா? போன்ற பல்வேறு கேள்விகளை வீடு வீடாக சென்று அந்தக் குழு கேட்டறிந்து வருகிறது.