தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.! சென்னை மெட்ரோ சேவை இப்போ ஓகே.!
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவை துவங்கியது.
சென்னை மெட்ரோ சேவையானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ வழித்தடம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது அந்த தொழில்நுட்ப கோளாறு சரி செயப்பட்டு மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.