நேர மாற்றம் – சென்னை மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு..!
சென்னை மெட்ரோ ரயிலில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
சென்னை மெட்ரோ ரயிலில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயங்கும் என்றும், சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் வரையிலான சேவை மட்டும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.