கையை பிடித்து இழுத்தார்..தோளில் கைபோட்டார்…செம கடுப்பான அபர்ணா.!

Default Image

நடிகை அபர்ணா பாலமுரளி தற்போது “தங்கம்” திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவில்லை நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினருடன் கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றிற்கு நேற்று முன்தினம் அபர்ணா சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் மேடையில் ஏறிய நடிகை அபர்ணாவுக்கு பூ ஒன்றை கொண்டு வந்து கொடுக்க முயன்றார்.

பிறகு, பூவை கொடுத்துவிட்டு கை கொடுத்து புகைப்படம் எடுக்க அபர்ணாவை இழுத்தார். பிறகு தோளில் கையை போட முயன்றார். பிறகு அப்டியே அபர்ணா நழுவினார். இந்த சம்பவம் அபர்ணாவுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் கோபத்தை வெளியில் காமிக்காமல் சிரித்துக்கொண்டே விட்டுவிட்டார்.

இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைராகி வரும் நிலையில், இது குறித்து ரசிகர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, அந்த மாணவன், நான் தவறான எண்ணத்தில் அப்படி செய்யவில்லை. ரசிகர் என்கிற முறையில் உணர்ச்சி வசப்பட்டு அப்படி நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

ஆனால், மாணவர் செய்த இந்த செயலால் நடிகை அபர்ணா கடும் கோபமடைந்து பேசியுள்ளார். இதுகுறித்து ” சட்ட கல்லூரி மாணவருக்கு பெண்ணின் அனுமதி இன்றி தொடக்கூடாது என்பது தெரியாதா. கையை பிடித்து இழுத்தார்..தோளில் கைபோட்டார். இப்படி செய்யலாமா..? என்று கேள்வி எழுப்பி கோபத்துடன் பேசினார். இதனை தொடர்ந்து, கேரளாவின் எர்ணாகுளம் சட்ட கல்லூரி நிர்வாகம் அபர்ணாவிடம் அத்துமீறிய அத நபரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்