மெஸ்ஸி, ரொனால்டோவை சந்தித்த வீடீயோவை வெளியிட்ட அமிதாப் பச்சன்.!
ரியாத்தில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை சந்தித்த அமிதாப் பச்சன் அந்த வீடீயோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நட்சத்திர கால்பந்து வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் கிளப் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியின் தொடக்கத்தில், இருவருக்கும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிஎஸ்ஜி(PSG) மற்றும் சவுதி ஆல்-ஸ்டார் XI அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக அவர்களை சந்தித்த அமிதாப் அந்த வீடீயோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அமிதாப் பச்சன், இந்த வீடீயோவை தனது ட்விட்டரில் பகிர்ந்து, என்ன அருமையான மாலைப்பொழுது! கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர் அனைவரும் ஒன்றாக விளையாடுகிறார்கள், விளையாட்டை துவக்கிவைக்க விருந்தினராக சென்ற அமிதாப் பச்சன், பிஎஸ்ஜி(PSG) மற்றும் ரியாத் கால்பந்து தொடர் அற்புதமானது என கூறியுள்ளார்.
T 4533 – “An evening in Riyadh .. ” what an evening ..
Cristiano Ronaldo, Lionel Messi, Mbape, Neymar all playing together .. and yours truly invited guest to inaugurate the game .. PSG vs Riyadh Seasons ..
Incredible !!!#football #Ronaldo #Messi #AlNassr #SaudiArabia pic.twitter.com/fXlaw9meeV— Amitabh Bachchan (@SrBachchan) January 20, 2023