குடிநீர்தொட்டியில் மனிதக்கழிவு.! 10 தனிப்படை.. 40 பேரிடம் விசாரணை.! சிபிசிஐடி எஸ்.பி ஆய்வு.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தை 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த குடிநீர்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையை தற்போது சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 பேர் கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர் 10 தனிப்படைகளாக பிரிந்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று வரை 40 நபர்களிடம் விசாரணை முடிந்துள்ளளது.
இந்த விசார்ணை குறித்து சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தனிப்படை அதிகாரிகளோடு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.