கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.!
உயிரிழந்த கனியமூர் பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை மாணவியின் தயார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்காக மாணவி பயன்படுத்திய செல்போனை பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் சிபிசிடியிடம் செல்போனை ஒப்படைக்க மறுத்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க மனு அளித்தனர். ஆனால், மாணவியின் செல்போனை விழுப்புரம் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, மாணவியின் செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாணவி பயன்படுத்திய செல்போனை மாணவியின் தாயார் விழுப்புரம் சிபிசிஐடி காவல் நிலையத்தில் ஏடிஎஸ்பி கோமதியிடம் ஒப்படைத்தார்.