பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்! பிபிசி மீது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் புகார்

Default Image

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் தொடர்பாக பிபிசி, மீது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் கலவரம் தொடர்பாக, பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனம்(பிபிசி) தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு பதிலளிக்கும் வகையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால், நாட்டின் ஒருமைப்பாட்டைத் தாக்கியதாக, பிபிசிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு கோத்ராவில் இந்து யாத்ரீகர்கள் சென்ற ரயில் தீவைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, குஜராத்தில் வெடித்த வன்முறையை மோடி நிர்வகிப்பது குறித்த, பிபிசியின் இந்த ஆவணப்படம் நாட்டின் ஒற்றுமையை குலைப்பதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பிரதமர் மோடியைத் தேர்ந்தெடுத்தனர். பிபிசியின் இந்தச் செயல், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டும் சதி என்று ஜிண்டால் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO