காங்கிரஸ் கட்சிக்குள் கொரோனா நுழைந்துவிட்டது.! ராஜஸ்தான் முதல்வர் சர்ச்சை கருத்து.!
காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய கொரோனா நுழைந்துவிட்டது. – ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட் அண்மையில் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய கொரோனா நுழைந்துவிட்டது என குறிப்பிட்டு பேசினார்.
அவரது பேச்சு தற்போது அரசியல் களத்தில் மிக பெரிய பேசு பொருளாக மாறி வருகிறது. காங்கிரஸ் முக்கிய தலைவரே கட்சிக்குள் மிக பெரிய கொரோனா புகுந்துவிட்டது என குறிப்பிட்டு இவர் யாரை தாக்கி பேசுகிறார் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
அதாவது, ராஜஸ்தான் மாநில துணை முதல்வராக இருக்கும் சச்சின் பைலட்டுக்கும் , அசோக் கெலாட்டிற்கும் ஓர் பனிப்போர் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மாநில முதல்வர் வேட்பாளராக சச்சின் பைலட்டை முன்னிறுத்தும் வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த வேலையில் இந்த கருத்து வெளியாகி உள்ளதால் ஒருவேளை சச்சின் பைலட்டை , முதல்வர் அசோக் கெலாட் கூறியிருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.