சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிளாக் பஸ்டர் ‘வாரிசு’ ? வெளியான சூப்பர் தகவல்.!

Default Image

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. வசூல் ரீதியாக படம் வெளியான 1 வாரத்தில் உலகம் முழுவதும் 210 கோடிகள் வசூல் செய்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

திரையரங்குகளை வெளியானதை தொடர்ந்து இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியிலும் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், வாரிசு திரைப்படம் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற தேதி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

அதன்படி, படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சி நிறுவனம் கைபற்றியுள்ளதாகவும், வரும் ஏப்ரல் 14-தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு உரிமையை சன் டிவி தான் வாங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்