இந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார் – அமைச்சர் செந்தில் பாலாஜி
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு எழுச்சி வந்துள்ளது என உதயநிதி பேச்சு.
சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் 2ம் நாள் நேர்காணல் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செஸ் போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு எழுச்சி வந்துள்ளது.
மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது. இந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார். ஆதாருடன் மின்சார அட்டையை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.