அதிமுகவில் சண்டை ஏற்படும் போது திமுக உள்ளே புகுந்து விடுவார்கள் – ராஜேந்திர பாலாஜி
தேர்தல் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு தற்போது மக்களிடம் எழுந்துள்ளதாக ராஜேந்திர பாலாஜி பேச்சு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களை நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள். மேலும் மகளீருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தருவதாக சொன்ன திமுக இதுவரை அதை வழங்கவில்லை .அவர்கள் கொடுத்த 520 தேர்தல் அறிக்கையும் பொய்தான். திமுக பொய் சொல்லி தான் வாக்கு வாங்கினார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது உள்ள விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு தனமாக செங்கலை காட்டி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கினார். திமுக ஆட்சியில் யாரும் வாழ முடியாத அளவிற்கு விலையேற்றம் உள்ளது. அரசு ஊழியர்கள் தற்போதைய முதல்வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கலாம் என நினைக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
திமுகவினர் கட்சியை பாதுகாக்க ஆட்சி நடத்தவில்லை குடும்பத்தை பாதுகாப்பதற்காக தான் ஆட்சி நடத்துகின்றனர். மக்கள் தற்போது திமுக ஆட்சியின் மீது வெறுப்படைந்துள்ளனர். தேர்தல் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு தற்போது மக்களிடம் எழுந்துள்ளதாகவும் அதிமுகவில் சண்டை ஏற்படும் போது திமுக உள்ளே புகுந்து விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.