இடைத்தேர்தலில் பாஜக போட்டியா.? எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதில்.!
இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக , பாஜக கட்சி தலைமைகள் தான் முடிவு செய்யும். – பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது முதல் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. பிரதான கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த தேர்தல் குறித்து நாளை பாஜக முக்கிய நிர்வாகிகள் கடலூரில் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பாஜக போட்டியிடுகிறதா? அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதா என அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆனால், இதற்கு முன்னரே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தல் குழுவை நியமித்தார். இதனால் பாஜக போட்டியிடுமோ என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது. இது குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சேத்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக , பாஜக கட்சி தலைமைகள் தான் முடிவு செய்யும். பாஜக தேர்தல் குழுவை அமைத்தது. தேர்தல் பணிக்காக மட்டுமே.’ என விளக்கம் அளித்தார்.