புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளை.! மத்திய சட்டத்துறை அமைச்சர் உறுதி.!

Default Image

புதுச்சேரிக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளையோ அல்லது உயர்நீதிமன்ற அமர்வு நிச்சயம் அமைத்து தரப்படும். – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதியளித்தார். 

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தார்.

அதன் பிறகு அவர் பேசுகையில், நீதிமன்றத்தில் அதிக நேரத்தை மக்கள் செலவிடக் கூடாது. மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க செய்வது முக்கியம். அதற்கான உதவிகளை அரசு செய்யும்.  மேலும், புதுச்சேரிக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளையோ அல்லது உயர்நீதிமன்ற அமர்வு நிச்சயம் அமைத்து தரப்படும் எனவும் அமைச்சர் கிரண் ரிஜிஜூ அந்த நிகழ்ச்சியில் உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அரசு வழக்கறிஞர் வெங்கட்ரமணி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி டி.ராஜா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்