தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார்  விசாரணை தொடக்கம்!

Default Image

சி.பி.சி.ஐ.டி., போலீசார் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து  விசாரணையை தொடங்கினர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு வழக்கை தூத்துக்குடி போலீசார் விசாரித்து வழந்தனர். இந்நிலையில் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து இந்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் நேரடி மேற்பார்வையில் நெல்லை சி.பி.சி.ஐ.டி துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் இன்ற தொடங்கினர்.

இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்றே தூத்துக்குடி விரைந்தனர். தூத்துக்குடியில் இதற்காக பிரத்யேக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்கு விபரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலமாக பெற்றனர்.

துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கினை பதிவு செய்த போலீஸ் அதிகாரி, அதன் விசாரணை அதிகாரி, புகார் கொடுத்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதிகொடுத்த அதிகாரிகள், துப்பாக்கி சூட்டின் போது பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் ஆகிய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire