மல்யுத்த வீரர்களின் பிரச்சனைகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும்- ஹரியானா முதல்வர்

Default Image

மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து ஹரியானா முதல்வர், வீரர்களின் பிரச்சனைகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். WFI தலைவர் சரண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அடுத்து வீரர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஹரியானா முதல்வர் கூறும்போது, விளையாட்டு வீரர்கள் எழுப்பும் அனைத்து பிரச்சனைகளும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும். எங்கள் பெண் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, நாங்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களின் மன உறுதியை நாங்கள் குறைக்க மாட்டோம், என்றும் கட்டார் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்