கொரோனாவிற்கு பிறகு, குழந்தைகளின் கற்றல்திறன் பாதித்துள்ளதாக ரிப்போர்ட்
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, குழந்தைகளின் கற்றல் திறன் பாதிப்படைந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டிற்கான கல்விநிலை அறிக்கையின் படி, கொரோனா தொற்றுநோய் குழந்தைகளின் கற்றல் திறனை வெகுவாக பாதித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் அவர்களின் அடிப்படை வாசிப்பு திறன் 2012க்கு முந்தைய நிலைக்கு குறைந்துள்ளது.
தேசிய அளவில், குழந்தைகளின் அடிப்படை எண்கணித நிலைகள் குறைந்துள்ளன. இது 2018ஆம் ஆண்டின் நிலையை விட பெருமபாலான கிரேடுகள் குறைந்துள்ளது. மேலும் பெருமபாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் குழந்தைகளின் வாசிப்பு திறன் பாதிப்படைந்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.